முக்கியச் செய்திகள் குற்றம்

காதல் ஜோடி தற்கொலை முயற்சி; காதலன் உயிரிழப்பு

கேரளாவில் காதல் ஜோடி ஒன்று மலை உச்சியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் மறையூர் பகுதியை சேர்ந்த நாதிர்ஷா, நிகிலா தாமஸ் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பிரம்மரம் பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு அமர்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு பிளேடால் கையை அறுத்துக் கொண்டுள்ளனர். இதனால், ரத்தம் வெளியேறிய நிலையில், இருவரும் அங்கேயே மயங்கியுள்ளனர்.

இதில், மலை உச்சியில் அமர்ந்திருந்த நாதிர்ஷா அங்கிருந்து உருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மயங்கிய நிலையில் நிகிலா இருப்பது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாதிர்ஷாவின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்தனர். அந்த வீடியோவை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

Halley karthi

22 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்: 28 பேர் சீரியஸ்!

Halley karthi

இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Gayathri Venkatesan