பீகார் சட்டமன்ற தேர்தல் : மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவு!

பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே நவம்பர் மாதம்  6,11 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி  121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார்  65.08 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே அதிகமாக பதிவான வாக்கு சதவீதம் ஆகும்.

இந்த சூழலில், பீகாரில் 122 தொகுதிகளுக்கான  2 ஆம் கட்ட வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.