நாடு முழுவதும் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கயைில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24…

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கயைில், “இந்தியாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல 16,326 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 3,41,59,562ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 17,677 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,35,32,126 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,53,708 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் 1 லட்சத்து 73 ஆயிரத்து 728 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 233 நாட்களுக்கு பின்னர் இந்த எண்ணிக்கையானது குறைந்துள்ளது. இதுவரை 101 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

https://twitter.com/MoHFW_INDIA/status/1451763811686359041

நாடு முழுவதும் இந்த திடீர் உயிரிழப்பு அதிகரிப்புக்கு கேரளாவில் புதிதாக 292 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதே காரணமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மேற்குறிப்பிட்ட 292 பேரின் உயிரிழப்புகள் குறித்த போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் இந்த உயிரிழப்புகள் இடையில் விடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் 14ம் தேதியிலிருந்து இந்த ஆவணங்கள் விடுபட்டுள்ளன. இதனை தவிர்த்து 172 உயிரிழப்புகள் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் காரணமாக இந்த எண்ணிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.