அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை வருவாய்த்துறை அகற்றினர்.
விருதுநகரில்- மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர் மாவட்ட பாஜக கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பாஜகவின் கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகிலேயே புதிதாக பாரத மாதா சிலை நிறுவப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பாரத மாதா சிலையை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அகற்ற
முயன்றனர். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்த பாரத மாதா சிலையை அகற்ற பாஜகவினர் சிலையின் முன்பு அமர்ந்து தீடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாஜக அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பால கணபதி தலைமையில் பாஜகவினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சுவார்த்தையில் பாரத மாதா சிலை சிலை அமைக்க கடிதம் எழுதி கொடுத்தால் அனுமதி தருவதாகவும் அதன் பின்பு சிலையை திறக்கலாம் அதிகாரிகள் கூறினார் .
இதையடுத்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாஜக அலுவலகம் சென்ற வருவாய்த் துறையினர், பாஜக அலுவலக வாயிற்கதவை இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்றனர். தொடர்ந்து, அங்கிருந்த பாரத மாதா சிலையை பாதுகாப்பாக அகற்றினர்.