சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி : 18 பதக்கங்கள் குவித்த இந்தியா!

சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி இங்கிலாந்து கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்திய அணியினர் 3 தங்கம்,…

சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டி இங்கிலாந்து கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்று விளையாடின. இதில் இந்திய அணியினர் 3 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 18 பதக்கங்கள குவித்துள்ளனர்.

கிருஷ்ணா நாகா் (ஆடவா் ஒற்றையா்), பிரமோத் பகத்/சுகந்த் கடம் இணை (ஆடவா் இரட்டையா்), மானசி ஜோஷி/துளசிமதி முருகேசன் (மகளிா் இரட்டையா்) ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

பிரமோத் பகத் (ஆடவா் ஒற்றையா்), நித்யஸ்ரீ (மகளிா் ஒற்றையா்), மனோஜ் சா்காா்/தீப் ரஞ்சன் பிசோயீ (ஆடவா் இரட்டையா்), சிராக் பரேதா/ராஜ் குமாா் (ஆடவா் இரட்டையா்), பிரமோத்/மனீஷா ராம்தாஸ் ஜோடி (கலப்பு இரட்டையா்) ஆகியோா் வெள்ளிப் பதக்கம் பெற்றனா்.

இதேபோல் நிதேஷ்குமார், சுகந்த் கடம், மானசி ஜோஷி மன்தீப் கௌா் உள்ளிட்ட வீரர்கள் 10 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.