முக்கியச் செய்திகள் இந்தியா

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக டெல்லியில் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் முந்நூறு நாட்களைக் கடந்துள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி நாடு முழு வதும் இன்று போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் போராட்டத்துக்கு புதுச்சேரி, கேரளா, டெல்லி, அரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், பா.ம.க, தேமுதிக உட்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள் ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் ஆங்காங்கே விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தை முடக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி- மீரட் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

குருகிராம், நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ஏராளமான கார்கள் ஊர்ந்து செல்கின்றன. நெரிசல் காரணமாக, ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றன. அப்ம்பா, பிரோஸ்பூர் பகுதியில் ரயில்வே தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராடி வருவதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram