சமீபகாலமாக பீர் மது வகைகளை அதிகம் குடிப்பதால் தான் உடல் பருமன்
அதிகரிப்பதாக மதுரையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றை இளம் தலைமுறையிடம் உடல் பருமன் என்பது தீர்வு காணமுடியாத பிரச்னையாக உள்ளது. இதற்காக ஜிம், டயட் என பல்வேறு விஷயங்களைச் செய்கின்றனர். இந்நிலையில், அறுவை சிகிச்சை எதுவுமில்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான இரப்பையை சுருக்கும் அதிநவீன சிகிச்சையை மதுரை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
இதுதொடர்பாக மதுரையில் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த குடல் இறப்பை அறுவை
சிகிச்சை மருத்துவர் ரமேஷ் அர்த்தநாரி, விஸ்கி, ரம் குடித்தால் உடல் எடை கூடாது ஆனால் பீர் குடித்தால் உடல் பருமன் அதிகரிக்கும். பீர் குடிப்பதாலும், இறைச்சி வகைகளை
அதிகம் எடுத்துக் கொள்வதாலும் இளம் வயதினருக்கு உடல் எடை சமீபகாலமாக
அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனை உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு
மூலம் சரி செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை எதுவுமின்றி இரப்பையை சுருக்கும் எண்டோஸ்கோபி ”ஸ்லீவ் கேஸ்ட்ரோ பிளாஸ்டி” என்ற சிகிச்சை முறையை மேற்கொண்டு உடல் எடையை குறைக்க முடியும் என்றார்.
மேலும், இவ்வாறு உடல் எடையைக் குறைக்கும்போது நீரிழிவு நோய், ரத்த அழுத்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
-ம.பவித்ரா








