சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உடல் பரிசோதனைக்காகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்க்கட்டிப் பாதிப்புக்கு உள்ளான சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், பல்வேறு உடற் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகின்றது.
அண்மைச் செய்தி: ‘குடியரசுத் தலைவர் பதவி எப்போது உருவானது? அதன் பணிகள், அதிகாரங்கள் என்ன?’
மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு இன்று மாலை அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மற்றும் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கார்த்தி சிதம்பரம். சமீபத்தில் இவரது இல்லத்தில் அமலாக்கத் துறையினர் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். எத்தனை முறைதான் சோதனை செய்வீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பி இருந்தார் கார்த்தி சிதம்பரம்.








