பான் இந்தியாவில் நம்பிக்கை இல்லை – இயக்குனர் பா ரஞ்சித்

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் பூஜை இன்று அடையாறில் நடைபெற்றது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார். தற்காலிகமாக சியான்61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த…

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் பூஜை இன்று அடையாறில் நடைபெற்றது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.

தற்காலிகமாக சியான்61 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜையில் நடிகர் சிவகுமார், ஆர்யா, நடன இயக்குனர் சாண்டி, கலையரசன் மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா ரஞ்சித்

அட்டக்கத்தி வெளியாக முக்கிய காரணம் ஞானவேல் தான். நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஞானவேல் தயாரிப்பில் புதிய திரைப்படம் எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மிக அற்புதமான நடிகர் விக்ரமுடன் இணைந்து படம் பண்ணுவது பிரம்மிப்பாக உள்ளது.

90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை வைத்தே இந்த படத்தை எடுக்க உள்ளோம். இந்த படம் எடுப்பதற்கே ஒரு பெரிய சவால் உள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் இடம்பெறும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது அது போல இந்த படத்தில் விக்ரம் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பான் இந்தியா என்பது எனக்கு நம்பிக்கை. மொழிக்கு தடை கிடையாது. எந்த மொழியில் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. டிஜிட்டல் தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. உலக அளவில் பெரிய ரீச் இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் கோப்ரா, பொன்னியின் செல்வன் எனும் இரண்டு பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை என தொடர்ந்து வெற்றிப் படைப்புகளை அளித்து, கவனம் ஈர்க்கும் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதன்முறையாக சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.