முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!

நாய் ஒன்று தனது உரிமையாளரின் உருவப்படத்தை வரைய முயற்சிக்கும் அழகிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோ 12 லட்சம் பார்வைகளைப் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது.

பொதுவாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், அவைகளுடன் விளையாடி அதிக நேரத்தை செலவிடுவது வழக்கம். இதுதவிர தங்களது செல்ல பிராணிகளுக்கு தங்களால் முடிந்த சில விஷயங்களை கற்று தருவதையும் அவர்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அந்த வகையில் நாய் ஒன்று தன்னுடைய உரிமையாளரிடம் இருந்து வரைய கற்றுக் கொண்டு அழகாக படம் வரையும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வெளிநாட்டு பெண் ஓவியரான கேட் டோவா தனது செல்ல நாய் ஓவியம் உருவாக்கும் வீடியோவைப் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘ஒருவருக்கொருவர் வர்ணம் பூசுதல்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அச்சச்சோ என்று நாயை பார்த்து செல்லமாக சொல்ல வைப்பது போன்றும் உள்ளது.

மேலும் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது நாயும், ஓவியரான கேட் டோவாவும் வண்ணம் தீட்டத் தயாராகி வருகின்றனர். பின்னர் அவர்கள் தனிப்பட்ட ஓவியங்களை உருவாக்க வெவ்வேறு வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்துகின்றனர். நாய் தன் வாயில் வைத்துக்கொண்டு வண்ணப்பூச்சு தூரிகை மூலம் வண்ணம் தீட்ட முயற்சிப்பதைப் பார்ப்பது மிகவும் ஆச்சர்யமாகவும், பிரமிப்பை ஏற்படுத்துவது போன்றும் உள்ளது.

ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, 12 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது . மேலும், இந்த பகிர்வு தொடர்பாக நாய்க்குட்டிக்கு தங்கள் பாராட்டுக்களைக் காட்ட பார்வையாளர்கள் தங்களது அன்பு நிறைந்த கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஓவியரான கேட் டோவா பகிர்ந்துள்ள, இந்த வீடியோ பதிவு தற்போது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பயனர் ஒருவர் கூறுகையில் , “நான் இதுவரை சில நாய்கள் வரைவதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததில் இது தான் மிகவும் சிறந்தது” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோல் “செயல்முறையின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். “உங்கள் படைப்புகளைக் காட்டும்போதும்,  உங்கள் நாய்க்குட்டி உங்களைப் பார்த்து சிரிக்கும் விததத்தை பார்க்கும் போது அது எவ்வளவு விலைமதிப்பற்றது” என்று மூன்றாமவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களே சிலர் ஓவியம் வரைய தடுமாறி பயந்து நிற்கும் சூழலில் நாய் ஒன்று சிறப்பாக ஓவியம் வரைந்துள்ளது பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. ஒரு செல்லப்பிராணியே சரியான பயிற்சியுடன், ஒரு காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கிறது எனும் பொழுது, நாமும் சரியான பயிற்சியுடன் முயற்சி செய்தால் எல்லாம் சாத்தியமாகும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram