விஜய்யின் #TVK மாநாட்டிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் பேனர் – #NDA கூட்டணியில் திடீர் சலசலப்பு!

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் விஜய்யின் தவெக கட்சி மாநாடு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே தமிழக வெற்றிக் கழக…

Banner with Puducherry Chief Minister Rangasamy pic for Vijay's #TVK conference - buzz in #NDA alliance!

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி படத்துடன் விஜய்யின் தவெக கட்சி மாநாடு பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் தவெக தலைவர் விஜய் படத்துடன் முதலமைச்சர் ரங்கசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் ‘2026-ல் ஆளப்போறான் தமிழன்’ என்ற வாசகத்துடன் வேட்டி – சட்டையுடன் விஜய் நடந்து வருவது போலவும், மறுபுறம் முதலமைச்சர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போலவும் இடம் பெற்றிருந்தது.

அதேபோல, பேனரின் மற்றொரு புறத்தில் முதலமைச்சர் ரங்கசாமி படமும் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இதன் தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். அவரது நண்பரான புஸ்ஸி ஆனந்த் மூலம் நடிகர் விஜய்யை ரங்கசாமி ஏற்கெனவே சந்தித்துள்ளார்.

தவெக தொடங்கியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மற்றொரு கட்சி விளம்பரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி இடம் பெற்றுள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.