வங்கிகளை தனியார்மயமாக மாற்றக் கூடாது என்பதை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய வங்கி ஊழியளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களிடம் விற்கக்கூடாது என்று நாளையும், நாளைமறுநாளும் வங்கி ஊழியர்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலாளர் சி. பி. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களும் பங்கேற்க உள்ளதாக ஆட்டோ, டாக்ஸி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார். இதில், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 2019-ஐ திரும்ப பெற வேண்டும் என்றும், வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஓலா மற்றும் ஊபரை தடைசெய்து அதற்கு பதிலாக இணையவழி சேவையை அரசே தொடங்கி ஏற்று நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஆட்டோ, டாக்ஸி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: “குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிக்க தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்”
இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் ஆட்டோ, டாக்ஸி, பேருந்து ஓட்டுனர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போராட்டம் பொதுமக்களுக்கும் சேர்த்துதான் நடைபெறுகிறது என்பதால் பொதுமக்களுக்கு வங்கி சேவைகளில் எந்த வகையிலும் பாதிப்பு இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
- சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








