5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் களம்கண்டதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி! 15வது ஐபிஎல்-ன் மூன்றாவது போட்டி மும்பையில் உள்ள பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…

ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் களம்கண்டதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!

15வது ஐபிஎல்-ன் மூன்றாவது போட்டி மும்பையில் உள்ள பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் களம்கண்டன. இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 15 போட்டியில் பஞ்சாப் அணியும், 13 போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக டூ பிளஸி மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். அதில் 20 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து அனுஜ் ராவத் ஆட்டமிழந்தார். இவரையடுத்து பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி களமிறங்கினார். ஆட்டத்தின் முதலிருந்தே எதிரணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட டூ பிளஸி, 88 ரன்கள் எடுத்து 17.1 வது ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

இவர்களை அடுத்து ஆடிய தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி விக்கெட் இழக்காமல் ஆட்டத்தை தொடர்ந்தனர். தினேஷ் கார்த்திக், 14 பந்துகளில் 32 ரன்களும், விராட் கோலி 29 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்த பெங்களூரு அணி 206 ரன்களை பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

206 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 ஓவர்கள் முடிவில், விக்கெட் இழப்புகள் ஏதுமின்றி 56 ரன்களை எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 10 ஓவருக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில், 106 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து, 14 ஓவருக்கு 04 விக்கெட் வித்தியாசத்தில், 145 ரன்களை எடுத்தது. இறுதியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.