டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றில் களம் இறங்குகின்றன. இலங்கை, பங்களாதேஷ், ஓமன் என எட்டு அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்று வருகின்றன. இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, இரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 9வது போட்டியில் பங்களாதேஷ் அணியும் பப்புவா நியூ கினியா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் மஹமத்துல்லா 28 பந்துகளில் 3சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஷகிப் அல் ஹசன், 37 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பப்புவா நியூ கினியா அணி பேட்டிங்கை தொடங்கியது. பங்களாதேஷ் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி விக்கெட்டை அடுத்தடுத்த இழந்தது. இதனால் அந்த 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அனைத்து வீரர்கள் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்தாலும் கிப்ளின் தோரிகா என்ற வீரர் மட்டும் கடைசி வரை நின்று 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும் முகமது சைபுதீன். தஸ்கின் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.