உத்தரகாண்ட் மாநிலத்தில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, மழைவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் வீடுகள் இடிந்துள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தில் குமாவோன் (Kumaon region) பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டேரோடூன் வந்தார். நைனிடால், சம்பவாட், அல்மொரா, பிதோரகர்க், உதம்சிங் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேர்ந்த வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் டாமி, ஆளுநர் (Gurmit Singh) குர்மித் சிங் ஆகியோருடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித்ஷா, நிலச்சரிவு, மழை வெள்ளத்தில் சிக்கி 3, 500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார்.