கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழை இலையின் பயன்பாடு குறைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை முதல் 24- ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக, கோயில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து சந்தை களிலும் வாழை இலைகள் விற்பனையாகாமல் கட்டுக்கட்டாகக் குவிந்து கிடக்கின்றன.
வாழை இலையின் விலையும் கடுமையாகக் குறைந்துள்ளது. விலை சரிவு காரண மாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகக் கூறு கின்றனர்.







