கன்வார் யாத்திரை வழித்தடங்களில் இறைச்சி விற்பனைக்கு தடை – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!

உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரையின் வழித்தடங்களில் திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சிவபெருமானின் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதிக்கரைக்குச் சென்று, தங்களின் வீடுகளிலோ, அல்லது சொந்த ஊரிலோ…

உத்தரப்பிரதேசத்தில் கன்வார் யாத்திரையின் வழித்தடங்களில் திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

சிவபெருமானின் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதிக்கரைக்குச் சென்று, தங்களின் வீடுகளிலோ, அல்லது சொந்த ஊரிலோ உள்ள கோயில்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் எடுத்து பாதயாத்திரையாக செல்வது ’கன்வார் யாத்திரை’ என்று அழைக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கன்வார் யாத்திரை நடைபெறாமல் இருந்த நிலையில், இந்தாண்டு ஜூலை 14 ஆம் தேதி ’கன்வார் யாத்திரை’ தொடங்க உள்ளது.

இதையும் படியுங்கள் : ”பொது சிவில் சட்டம் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்” – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்!

இந்நிலையில், இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் வழித்தடங்களில், திறந்தவெளி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

15 நாட்கள் கன்வார் யாத்திரை தொடரும் நிலையில், மாநில அரசின் உத்தரவை அடுத்து, இறைச்சி வியாபாரிகளை உபி போலீசார் அணுகி வருகின்றனர். மேலும் கன்வார் யாத்திரை வழித்தடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.