”தரமற்ற வார்த்தைகள்”……… : பார்த்திபனின் விமர்சனத்திற்கு திரிஷா மறைமுக பதிலடி…….!

தரமற்ற வார்த்தைகள், யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவர்களை விட, அந்தப் பேச்சாளரைப் பற்றித் தான் அதிகம் வெளிப்படுத்தும் என்று நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய்யும் நடிகை திரிஷாவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், திரிஷாவின் புகைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. “இந்த குந்தவையை கொஞ்ச நாள் குந்தவைக்கறது (உட்கார வைப்பது) நல்லது. இந்த குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கறது கொஞ்சம் நல்லதுங்க, வெளிய வராம பாத்துக்கங்க. அதுனால நிறைய பிரச்சனைகள் உண்டாகாம பாத்துக்கலாம்” என பார்த்திபன் கூறியிருந்தார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் நடிகை திரிஷா, பெயரை குறிப்பிடாமல் இயக்குநர்  பார்த்திபனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ;

​”சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனக்கு ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனி நபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரது உதவியாளர் மூலம் கடைசி நிமிடத்தில் எனது பெயரும் படமும் (அந்த நிகழ்ச்சியில்) சேர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

​ஒரு மைக்ரோஃபோன் (ஒலிபெருக்கி) கையில் இருப்பதால் மட்டும் ஒரு கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை உரக்கச் சொல்ல மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் தரமற்ற வார்த்தைகள், அவை யாரை நோக்கி பேசப்படுகிறதோ அவர்களை விட, அந்தப் பேச்சாளரைப் பற்றித் தான் அதிகம் வெளிப்படுத்தும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.