மோசமான வானிலை; திருப்பி அனுப்பப்படும் விமானம்

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.  வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த…

தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த பாதிப்பை சந்தித்தன. இன்னும் சென்னையில் மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று காலை முதல் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் தறையிரங்க முடியாமல் திருப்பி அனுப்பப்டுகின்றது.

அந்த வகையில், சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தற்போது மற்றொரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் சுற்றி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 190 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.