உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் நாட்டின் ஃபெர்னாட் அர்னால்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் LVMH மொயிட் ஹென்சி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான ஃபெர்னாட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 188 புள்ளி 6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகப்பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்திற்கு ஃபெர்னாட் அர்னால்ட் முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
எலான் மஸ்கின் டெஸ்லா உள்ளிட்ட இதர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிவடைந்து தற்போது 176 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது .ஃபெர்னாட் அர்னால்ட், ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு குறுகிய நாட்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்திலும், கௌதம் அதானி 24ம் இடத்திலும் உள்ளனர். ஹிண்டர் பர்க் அறிக்கைக்கு பிறகு கௌதம் அதானியின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அவர் 24ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், மைக்ரோ சாஃட் நிறுவனர் பில்கேட்ஸ் 6வது இடத்திலும், பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஷூஃபெர்க் 16வது இடத்திலும் உள்ளனர்.







