பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, விஷால் உடன் ‘ஆக்ஷன்’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பொன்னியின் செல்வன் படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். அதில் ரசிகர்களை அதிகம் கவரப்பட்ட பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.
குந்தவை, நந்தினி, வானதி, மணிமேகலை ஆகிய பிற பெண் கதாபாத்திரங்கள் அரச குலத்தோடு தொடர்பு பட்டிருந்தாலும், ஒரு சாதாரண பெண்ணாக வரும் பூங்குழலின் வேறெந்த பெண்ணிடமும் காணப்படாத துணிவும், வலிமையும், துடிப்பும், காணப்படுகிறது.
பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாகப் படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தைக் காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/LycaProductions/status/1643546689272430593?s=20
இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இந்த சூழலில் பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ட்ரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த ஐஷ்வர்யா லட்சுமியின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







