நடிகர் ராணா தான் வாழ்ந்த பூர்வீக வீட்டை தற்போது ரெஸ்டாரான்டாக மாற்றியுள்ளார்.
திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தற்போது நடிப்பை தாண்டி பல தொழில்களில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக நட்சத்திர உணவு விடுதிகளை திரையுலகினர் அதிகமாக நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையுலகில் தற்போது பிஸி நடிகையாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் சென்னையில் ரெஸ்டாரான்ட் ஆரம்பித்துள்ளார்.
அந்த வரிசையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா தற்போது ஒரு ரெஸ்டாரான்ட் ஆரம்பித்துள்ளார். அவரது நெருங்கிய உறவினரான ஆஷ்ரிதா என்பவர் புட் ரிவியூ யூடியூப் சேனல் வைத்துள்ளார். அவருடன் இணைந்து தங்களது பூர்வீக வீட்டில் ஆரம்பித்து இருக்கும் ரெஸ்டாரன்ட் குறித்து ராணா தனது அனுபவங்களையும், சிறுவயது நினைவுகளையும் பகிர்ந்தார்.
இதுகுறித்து நடிகர் ராணா கூறுகையில், நான் வாழ்ந்த வீட்டையே ரெஸ்டாரான்டாக மாற்றியுள்ளேன். இந்த வீட்டில் 20 வருஷம் நான் வாழ்ந்துள்ளேன். எனது கல்லூரி பருவம் வரை இந்த வீட்டில் தான் வாழ்ந்தேன். தற்போது இந்த வீட்டை ரெஸ்டாரான்டாக மாற்றியுள்ளேன். தற்போது இங்கு பார் (Bar) அமைந்திருக்கும் இடத்தில் தான், சிறுவயது முதல் நான் பல படங்களை பார்த்து வளர்ந்தேன் என்று கூறினார்.
மேலும் ஆஷ்ரிதா மற்றும் ராணா தாங்கள் அதிகம் செலவழித்த பால்கனியை சுற்றி பார்த்தனர். அது இப்போதும் பால்கனியாகவே உள்ளது. இந்த இடம் அவர்கள் இருவருக்கும் மிக பிடித்தமான இடம் என தங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.







