முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

இந்தியா -பாக் போட்டியின்போது வென்டிலேட்டரில் இருந்த பாபர் அசாமின் தாய்: தந்தை அதிர்ச்சி தகவல்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தாய் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்ததாக அவர் தந்தை தெரிவித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் மோதின. பயங்கர எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை அந்த அணி கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டி நடந்த போது, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தாய் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார் என்று அவர் தந்தை ஆசம் சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். இதற்கிடையே நம் தேசம் சில உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் வீடு பெரிய வேதனையில் சிக்கியிருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டி நடந்து கொண்டி ருந்த போது, பாபர் அசாமின் தாய் வென்டிலேட்டரில் இருந்தார். இதனால் கடந்த மூன்று போட்டிகளிலுமே பாபர் கடும் நெருக்கடியிலேயே விளையாடினார். அவர் பலவீன மடையக் கூடாது என்பதற்காகவே இதை இங்கு தெரிவிக்கிறேன். கடவுள் அருளால் அவர் இப்போது நலமாக இருக்கிறார். இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த பதிவு வைரலானதை அடுத்து பாபர் அசாமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாட்டிலும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

Ezhilarasan

ஜிதேந்தராக மாறிய வாசிம்: இந்துவாக மாறியது ஏன்?

Halley Karthik