முக்கியச் செய்திகள் தமிழகம்

வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறதா, ஏற்கிறதா? சீமான் கேள்வி

தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் மத்திய அரசு நட்பு பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்தும், வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை திரும்பப் பெறக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, காடுகள் மீது அக்கறையின்றி வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா கொண்டு வரப்படும் நிலையில், அதனை தமிழக அரசு ஏற்கிறதா? எதிர்க்கிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

கூடங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு மேலும் அணு உலைகளை அமைக்க முயற்சி செய்வதாகவும் கூறினார்.

தமிழக மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காமல், அந்நாட்டுடன் மத்திய அரசு நட்பு பாராட்டுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்கள்”- டிடிவி தினகரன் வைத்த சஸ்பென்ஸ்

Web Editor

50% கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்: துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Arivazhagan Chinnasamy

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞர் போக்சோவில் கைது

G SaravanaKumar