இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ..! ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில்…

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கி உள்ள இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அயலான் திரைப்படம் முழுவதும் வரும், வேற்றுக்கிரகவாசி அதாவது ஏலியன்கதாப்பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 4500+VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்‌ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சயின்ஸ் பிக்‌ஷன் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அயலான் படத்தின் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

https://twitter.com/letscinema/status/1650373181268709376?s=20

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.