புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், முகத்தில் விழுப்புணர்வு ஓவியங்களை வரைந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவ…

புதுச்சேரியில் கண் தானத்தை வலியுறுத்தும் வகையில், முகத்தில் விழுப்புணர்வு ஓவியங்களை வரைந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுச்சேரி ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுரி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இரு வார கண்தான
விழாவையொட்டி கண்தான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கம்பன்
கலையரங்கில் இருந்து தொடங்கிய பேரணியை, சுகாதாரத்துறை ரெட் கிராஸ்
அமைப்பின் செயலர் லட்சுமிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக சென்று பாரதி பூங்காவில்
நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200 மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும்
மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்றத்துடன் கண் தானத்தை
வலியுறுத்தும் வகையில் கண்ணை, கருப்பு ரிப்பன் கொண்டு கட்டியும்,
முகங்களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தும், விழிப்புணர்வு
பதாகைகளை ஏந்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.