நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே காட்டெருமை ஒன்று குடிநீர்
தேடி கிராமத்திற்குள் நுழைந்தது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள ஒரு குக்கிராமத்தில் இன்று காலை 11
மணியளவில், வயதான காட்டெருமை ஒன்று குடிநீர் தேடி கிராமத்திற்குள் நுழைந்தது.
அவ்வாறு நுழைந்த அந்த காட்டெருமை, தண்ணீர் தேடி சுற்றித் திரிவதை உணர்ந்த
கிராம மக்கள் காட்டெருமையின் தாகத்தை போக்க, ஒரு வாலி முழுவதும் தண்ணீர்
நிரப்பி அதன் அருகில் வைத்தனர்.
இதைப் பார்த்து காட்டெருமை யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல்,
தண்ணீரைக் குடித்த பிறகு மீண்டும் தேயிலைத் தோட்டம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
கு. பாலமுருகன்







