அஜித்தின் விடாமுயற்சி குறித்து புதிய அப்டேட்!

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி…

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பலரும் கவனிக்கும் ஒரு முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை அடுத்து அஜித் லைகா நிறுவன தயாரிப்பில் படம் நடிக்கிறார் என்பது உடனே முடிவானது. ஆனால் இயக்குநர் மட்டும் யாரென்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், மகிழ்திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது. இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கடந்த வருடம் கலகத்தலைவன் என்ற ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை நடிகர் உதயநிதி நடிப்பில் இயக்கி வெற்றி கண்டார். இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் ”விடா முயற்சி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது அஜித் குமார் நடிக்கும் 62-வது படம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் பைக் பயணத்தில் பிசியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நேற்று சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படம் குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும், தங்களுக்கு இப்படம் முக்கியமானது எனவும், இனி தாமதமாகாது என்றும் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலைக் கேட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.