அண்ணாமலை பற்றி கேள்வி கேட்பதை தவிர்த்துவிடுங்கள்- செந்தில்பாலாஜி

அண்ணாமலை நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை.  நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம் என மின்சாரத்துறை…

அண்ணாமலை நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை.  நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் வருகின்ற 24 ம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக கோவை ஈச்சனாரி பகுதியில் நிகழ்ச்சியின் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு 70 கோடி நிலுவை தொகை செலுத்தப்பட்டு உள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, போர்டலில் சரிபார்க்கும் வசதியையும், செலுத்த கூடிய தொகைக்கு சரிவர கணக்கு வைத்து கொள்ளும் வசதியையும் ஏற்படுத்த வலியுறுத்தப்படும் என்றார்.

தமிழக அரசு மத்திய அரசிற்கு 70 கோடி கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தடை போடுகிறது. ஆனால் அவர்கள் பல்வேறு துறைக்கு வழங்ககூடிய நிலுவை தொகைகள் காலம் தாழ்த்தி கொடுக்கிறார்கள். அதை நாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. இது கூட்டாட்ச்சி தத்துவத்திற்கு எதிரானதாக தான் பார்க்க முடியும். மின்சார சட்டதிருத்த மசோதாவிற்க்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களிலும் மின்சார திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு இருக்கிறது. மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

அண்ணாமலை நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. ஊடகங்களை சந்தித்து எதாவது பேச வேண்டும் என்று அவர் பேசுகிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்றால், இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம். அண்ணாமலை சொல்வதைக் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிந்து கொள்கிற பக்குவம் இருக்க வேண்டும். இல்லையென்றால் தெரிந்து கொள்ள வேண்டும். இரண்டு இல்லையென்றால் அவர் பற்றி பேசி நேரத்தைக் வீணடிக்க வேண்டாம் எனத்தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் தொடர்பான குற்றசாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், இரண்டு வருடம் சலுகைகளை அனுபவித்து கொண்டு அப்போதெல்லாம் மின் கட்டணம் செலுத்தாமல், இப்போது சொன்னால் அது ஏற்று கொள்ளமுடியாது. கடந்த கால அரசு செய்த தவறைக் நாம் தொடர முடியாது. மிகுந்த கடனில் தவிர்த்து கொண்டிருக்கின்ற மின்சார வாரியத்திற்க்கு கூடுதல் நிதி ஒதுக்கி மின்சார வாரியத்தை தமிழக முதலமைச்சர் சரிவர நடத்தி வருகிறார் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.