ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: வி.கே.சசிகலா அறிக்கை

திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை திடீரென்று உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு, ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு…

திமுக அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை திடீரென்று உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்: திமுக அரசு, ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைத்ததன் மூலம் செயற்கையான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் இருந்து தொடர்ந்து செய்திகள் வரும் நிலையில், தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தி மறைமுகமாக தனியார் நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்க திமுக உதவுவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

திமுக இதை செய்வேன் அதை செய்வேன் என்று மக்களை நம்பவைத்து, ஆட்சியை பிடித்து விட்டு, பின்னர், தமிழக மக்களை வஞ்சிக்கின்ற வகையில் அவர்கள் தலையில் சுமைகளை எற்றுவது என்பது திமுகவிற்கு வாடிக்கையான ஒன்று தான்.

இவர்களுடைய நடவடிக்கைகளால் மக்கள் பாதிக்கப்படுவதோடு, அரசுக்கும் விற்பனை குறைந்து இழப்பு ஏற்படுத்தும் விதமாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பால், பல்வேறுவிதயான இழப்புகளை சந்தித்து அன்றாட வாழ்கையை நடத்தமுடியாமல் துன்பப்பட்டு வரும் வேளையில் இதுபோன்ற கூடுதல் சுமைகளையும் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

எனவே, இயற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, மக்கனை பாதிக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஆவின் பால் பொருட்களின் விலை ஏற்றத்தை உடனடியாக திருப்பு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.