அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்

சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்…

சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட நான்கு பேர் நேற்று சந்தித்துப் பேசினார்.

முன்னதாக அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பம் எனவும் ஓ.ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஓ.ராஜாவுடன் சேர்ந்து சசிகலாவை சந்தித்த, கூடலூர் நகர புரட்சி தலைவி பேரவை செயலாளர் சேதுபதி, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், மீனவர் பிரிவு செயலாளர் வைகை கருப்புஜி ஆகியோரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.