மேயரை “வணக்கத்திற்குறிய மேயர்” என அழைப்பது தொடர்பான அரசாணை குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கே.கே.நகரில் 23-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும்.
உக்ரைன் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு குழு அமைத்ததில் அரசியல் நோக்கம் இல்லை என தெரிவித்த அவர், ஒன்றிய அரசுக்கு உதவியாக தான் தமிழக அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழுவை அனுப்பி உள்ளது என்றார். அதோடு, அண்ணாமலை பேசுவது தமிழக மக்கள் மனதை எவ்வளவு புண்படுத்தும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என கூறினார்.








