நாளை தொடங்கும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள், நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை தொடங்குகின்றது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் மாடுபிடி வீரர்கள், ஜல்லிகட்டு விதிமுறைகள் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.
8 மணி நேரம் நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 600 முதல் 700 வரையிலான காளைகள் பங்கேற்கின்றன. இதற்காக அவனியாபுரத்தில் பாதுகாப்பு பணியில் 1,200 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.
நாளை நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, நியூஸ்7 தமிழ் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. நியூஸ்7 தமிழ் தோலைக்காட்சியிலும், நியூஸ்7 தமிழ் ப்ரைம் யூடியூப் சேனலிலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையில் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.







