இருசக்கர வாகனத்தினை மறித்து திருடர்களை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை விராலி மலை சாலை தெற்கு லெட்சுமி புரத்தில் வசித்து வரும் இரயில்வே ஊழியர் வினோஷின் மனைவி கோமளாதேவி, 4 வயது மகனை விராலி மலை சாலையில் உள்ள தனியார்ப் பள்ளியிலிருந்து மாலை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற கோமளாதேவியின் பின்னே இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், கோமளாதேவி கழுத்திலிருந்த இருந்த 5 சவரன் தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கோமளாதேவி என்ன செய்வது என்று தெரியாமல் சத்தம் போட்டுள்ளார். கோமளாதேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓட்டி வந்துள்ளனர். அதேநேரம் பள்ளி சவாரிக்குச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் செல்லையா, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவாறு வந்துள்ளார். அப்போது சற்றும் தாமதிக்காமல் ஆட்டோவை இருசக்கர வாகனத்திற்கு நெருக்கடி கொடுத்து சாலையில் நிறுத்த முயன்றுள்ளார்.
செல்லையாவின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத திருடர்கள் இருசக்கர வாகனத்தோடு ஆட்டோவில் மோதி கீழே விழுந்துள்ளனர். அப்போது, திருடன் ஒருவன் தப்பி ஓடிய நிலையில், காயமடைந்த மற்றொரு திருடனை ஓடிவந்த பொதுமக்கள் பிடித்து சங்கிலியை மீட்டனர். பின் கைவைத்து போலீசாக்கு தகவல் தந்துள்ளனர். நிகழ் விடத்துக்கு வந்த போலீசார் திருடனைப் பிடித்து விசாரித்தபோது, நாகப்பட்டினம், காடம்பாடியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியினை சேர்ந்த மீனவரான விஜய் என்பவரும் அவரது நபர் திருச்சி எட்டரைக் கோப்பு பகுதியினை சேர்ந்த நவீன் என்பதும் தெரியவந்துள்ளது.
அண்மைச் செய்தி: ‘இறந்த பிறகு நம்முடைய சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?’
ஒருவர் தப்பி ஓடிய நிலையில், ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் ஓட்டி வந்த அந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என்பதும் தெரியவந்ததை அடுத்துக் காயமடைந்த விஜய் போலீஸாரால் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சங்கிலி பறிப்பில் காயமடைந்த கோமளாதேவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து டி.எஸ்.பி. ராமநாதன், ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், தப்பியோடிய மற்றொரு திருடனையும் தேடி வருகின்றனர்.