கொள்ளிடம் பாலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிலம்பம் சுற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
சீர்காழி வட்டம், அளக்குடி – திருக்கழிப்பாலை இடையே கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடிகொள்ளிடம் ஆற்று பகுதியில் வெள்ளிக்கிழமை நேரில் சென்று
பார்வையிட்டார்.
முன்னதாக சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதிக்கு வருகைதந்த அன்புமணியை வரவேற்க பாமக சார்பில் மாவீரன் சிலம்பாட்ட குழுவை சேர்ந்த சிலம்பம் கற்றுவரும் மாணவ, மாணவிகள் சிலம்பம், சுருள்வாள் சுற்றி
வரவேற்பு அளித்தனர்.
அப்போது காரை விட்டு இறங்கிய அன்புமணி ராமதாஸ் மாணவர் ஒருவரிடம் சிலம்பத்தை வாங்கி சிறிது நேரம் சுற்றினார். அதனை பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது.








