கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி சுற்று நடைபெற்றது.
அதில் முன்னணி வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார். இதில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ், போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் உடன் இன்று மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் விளையாடுவார்.







