முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

சந்தன மரங்கள் கடத்த முயன்ற 3 பேர் கைது

கோவை அருகே காரமடை வனச் சரகத்தில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி செய்த 3 பேரை வனத் துறையினர்  கைது செய்தனர்.

காரமடை வனச்சரகத்தில் காரமடை பிரிவு, குண்டூர் சுற்றில் அன்சூரை அடுத்த மோரிப்பள்ளம் பகுதியில் சந்தன மரத்தினை வெட்டிக் கடத்த சிலர் முயற்சி செய்வதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ரோந்துப் பணி மேற்கொண்டபோது அப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, குண்டூரைச் சேர்ந்த முருகேசன் (35), அன்சூரைச் சேர்ந்த வீரையன் (எ) காளிமுத்து (42), சஞ்சித் (21), சொரண்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் ஆகிய நால்வரும் 10 – 15 செ.மீ சுற்றளவுகள் கொண்ட 15 சந்தன மரங்களை வெட்டி செதுக்கி கடத்த முயற்சி செய்தனர் என்பது தெரியவந்ததது.

இதுதொடர்பாக, வீரையன், ஆனந்தகுமார், சஞ்சித் ஆகிய மூன்று பேரையும் கைது, அவர்களிடம் இருந்து சந்தன மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அடைப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமைறவாக உள்ள குண்டூரைச் சேர்ந்த முருகேசனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Halley Karthik

தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்

Halley Karthik

வருவாய் துறை அமைச்சர் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்-நயினார் நாகேந்திரன்

Web Editor