தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல்களும், கொடூரமாகக் கொலை செய்யப்படும் நிகழ்வுகளும் நடைபெறுவதைத் தமிழக அரசுத் தடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மாரியப்பன் ராசிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்,
பொதுச்செயலாளர் மற்றும் பார் கவுன்சில் கௌரவச் செயலாளர் உள்ளிட்ட பதிவுகளுக்குத் தேர்தல் ஆனது கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நீதிமன்ற வளாகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பு சங்கத் தலைவர் மாரியப்பன் பொதுச்செயலாளர் காமராஜ் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் , கூட்டமைப்பு சங்கத் தலைவர் மாரியப்பன் தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதும் , கொடூரமாகக் கொலை செய்யப்படுதலும் தொடர்ந்து நடைபெறுகிறது.இதனைத் தமிழ்நாடு காவல்துறை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனப் பேட்டியளித்துள்ளார்.
மேலும் வழக்கறிஞர்களைத் தாக்கும் நபர்கள் மீது சாதாரண வழக்குகள் பதிவு செய்யாமல்
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யச் சிறையில் அடைத்தால் மட்டுமே வழக்கறிஞர்கள்
மீது நடைபெறும் தாக்குதலைத் தடுக்க முடியும் என கூறினார்.
மத்திய அரசு,தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் 1.30 லட்சம்
வழக்கறிஞர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
மத்திய அரசு வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் தற்போது வரை செவி சாய்க்காமல் இருக்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றப்படவில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறினார் .இ்ந் நிகழ்வில் ராசிபுரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
-வீரம்மாதேவி







