தமிழகம் Agriculture

டிரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டம் -விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக மத்திய அரசின் 50 சதவீத மானியத்தில் டிரான்கள் மூலம் மருந்துகள்
தெளிக்கும் நவீன திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து
80 ஆயிரம் ஏக்கரில் சம்பா,குருவை உள்ளிட்ட நெற்பயிர்களும் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில்
உளுந்து பயிரும் சாகுபடி செய்யப்படுகின்றன. நகர்மயமாதலின் விளைவாக
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில், நடவு இயந்திரம்,உழவு
இயந்திரம், களை எடுக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் என்று இயந்திரங்கள்
மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் திரவ வடிவ மருந்துகள்
தெளிப்பதற்கு விவசாயிகள் இன்றும் கைத்தெளிப்பான்கள் மூலமே வயலில் நடந்து சென்று விவசாயப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு கால நேரம் அதிகமாக செலவாகுவதுடன் ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலத்தில் மருந்து அடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இதற்கு ஒரு தீர்வாக ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நவீன திட்டத்தின் கீழ் மத்திய அரசு  விவசாயிகளுக்கான ட்ரோன்களுக்கு 50% மானியம் வழங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையை அடுத்த அடியமங்கலம் பகுதியில்  உள்ள விவசாயி ஒருவரின் வயலில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ட்ரோனின் மொத்த மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்குகிறது.

இதன் மூலம் மருந்து தெளிப்பதால் ஒரு மணி நேரத்தில் 5 ஏக்கர் வரை விரைவாக மருந்துகளை தெளிக்க முடியும் என்று செயல்முறை விளக்கத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாரதிய கிசான் சங்கத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!

EZHILARASAN D

நாடாளுமன்ற செயல்பாடுகள்; எம்.பி. ஓபன் டாக்

G SaravanaKumar

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? முதலமைச்சர் இன்று ஆலோசனை

EZHILARASAN D