அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அண்மைச் செய்தி: சேலம் காவல் ஆணையர் உட்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், எதிரிகளையும் துரோகிகளையும் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ”எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பல்வேறு சோதனைகளை கடந்ததுதான் அதிமுக வளர்ந்தது. இதன் பிறகும் பல சோதனைகளை சந்தித்தோம். இப்போது உச்சநீதிமன்றத்தின் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இந்த தீர்ப்பு அதிமுகவுக்கு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.