10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி,

பாலநாகதேவி – சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமனம்.

அபின் தினேஷ் மொடக் – சென்னை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.

வித்யா ஜெயந்த் குல்கர்னி – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமனம்.

எம். ராமமூர்த்தி – சென்னை சி.ஐ.டி. ‘கியூ’ பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

பி.கே. அரவிந்த் – சென்னை சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர்-1 ஆக நியமனம்.

அர்பிதா ராஜ்புத் – சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக நியமனம்.

ஐ. ஈஸ்வரன் – சென்னை தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

எஸ்.ஆர். செந்தில்குமார் – நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

வி. சரவணகுமார் – சென்னை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) காவல் கண்காணிப்பாளராக நியமனம்.

டி. ரமேஷ் பாபு – திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையராக நியமனம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.