மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலதிருமாணிக்கத்தை சேர்ந்தவர் சிவகுமார்(33). இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். இதனிடையே ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்க்காக சிவக்குமார் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றார். அப்போது சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையேறிய சிவகுமார், சந்தன மகாலிங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, அன்னதான மண்டபம் அருகே அமர்ந்து தண்ணீர் குடித்து உள்ளார்.
அப்போது சிவகுமார் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அப்போது சிவகுமாருக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சிவகுமார் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிவகுமாரின் உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரம் கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




