அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ‘டி 55’ என அழைக்கப்படும் இப்படத்தை தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் தனுஷுடன் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீ லாலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் நடிகை சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.
சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு எழில் அரசு சினிமாட்டோக்ராபராக பணிபுரிகிறார்.
அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்த நிலையில் டி 55 படத்தின் புதிய அப்டேட் ஒன்று ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.




