வலைகளை அறுத்து எறிந்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரியிடம் அதற்கான…

மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்காக மீன்வளத்துறை அதிகாரியிடம் அதற்கான அனுமதி சீட்டை பெற்று கடலுக்கு 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு எறிந்தும், படகுகளின் இருந்த வலைகளை வெட்டி கடலில் வீசியும் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

இதனால் ஒரு படகிற்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.