பொற்பனைக்கோட்டையில் பழமையான செங்கல் கால்வாய்

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.…

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் பழமையான செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக கடந்த ஜூலை 30ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல்துறை பேராசிரியர் இள.இனியன் தலைமையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் ஏராளமான கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள், உடைந்த சுடுமண் பகுதிகள், இரும்பு பொருட்கள், பல வண்ண மணிகள் உட்பட ஏராளமான பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் அகழ்வாய்வு நடந்துவரும் இடத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான அடையாளமாக, செங்கல்லால் கட்டப்பட்ட கால்வாய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்னர், அகழாய்வில் இரும்பு கொக்கி, உடைந்த மண் பானைகள் மற்றும் வட்டுச்சில்லு ஆகியவை கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.