ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பெண்கள் தேரை தோளில் சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு கல்லுடைத்தான் மலை பகுதியில் பழமையான வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது,
ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வனத்து சின்னப்பர் நவநாள் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தேர்த் திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை தீபாராதனை, ஜெபமாலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு நடைபெற்ற ஆடம்பர தேர் பவனியையொட்டி ஆத்தூர் பங்கு தந்தை கிரிகோராஜன் தலைமையில் பாடல் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் சம்மனசு , வேளாங்கன்னி மாதா,வனத்து சின்னப்பர் சுருபங்கள் பொருத்திய மூன்று திருத்தேர்களை
அலங்கரித்தனர்.
பின்னர் இரண்டு தேர்களை பெண்கள் தோளில் சுமந்தபடி வான வேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகள் வழியாக தூக்கி சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். இந்த தேரோட்டத்தில் கல்லுடைத்தான் மலை பகுதியை
சுற்றியுள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வனத்து சின்னப்பரை வழிபட்டு
சென்றனர்.
—-ரெ.வீரம்மாதேவி
புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் தேரை தோளில் சுமந்து சென்ற பெண்கள்!
ஆத்தூர் அருகே பழமை வாய்ந்த புனித வனத்து சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பெண்கள் தேரை தோளில் சுமந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம்…






