பலத்த சூறாவளி காற்றால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீராணத்தில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றால் பத்திற்க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வீராணத்தில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளி காற்றால் பத்திற்க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள வீராணத்தில் நேற்று மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.வெப்ப சலனத்தின் காரணமாக திடீரென மழை பெய்ய துவங்கியது. மேலும் மழையுடன் பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது. இதனால் பத்திற்க்கும் மேற்பட்ட வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

மேலும் வீட்டினுள் இருந்த மேஜை,மின் விசிறி,பாத்திரங்கள் உள்ளிட்டவைகளும்
சேதமடைந்தன.சுமார் அரை மணி நேரம் நீடித்த சூறாவளி காற்ற்று வீராணம் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது.ஊரில் உள்ள பள்ளிவாசல் தெரு,காலனி பகுதிகள்
சூறாவளி காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.மேலும் மரக்கிளைகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளும் சாய்ந்து விழுந்தன.அவற்றை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சூறாவளி காற்றால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.