தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த ஒன்றிய அரசுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும், பொதுடமை சிந்தனையாளருமான ஜீவானந்ததின் 59-வது நினைவு நாளையொட்டி, அவரது சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் அரசின் சார்பில் வரலாற்றை எடுத்துரைக்கும் ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இதற்கு மோடி அரசாங்கம் கூறும் காரணம் வினோதமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அலங்கார ஊர்தி புறக்கணிப்பு – விளக்கம் https://t.co/WciCN2SQmv | #RepublicDayParade | #RepublicDay | @rajnathsingh | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/Md3u744Hyc
— News7 Tamil (@news7tamil) January 18, 2022
தமிழக ஊர்திகளை அனுமதிக்கப்பட வேண்டும் இல்லையேல், எதிர்விளைவுகளை ஒன்றிய அரசு சந்திக்க நேரிடும் எனவும் சாடினார். மேலும், மோடி தலைமையிலான மத்திய அரசு பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் அவமதிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என முத்தரசன் தெரிவித்தார்.








