முக்கியச் செய்திகள் இந்தியா

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்று பாதிப்பில், பொதுமக்கள் மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனைக்கான முடிவு நேற்று தெரியவந்துள்ளது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருதுவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் நலம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மீனவர்கள் கைது: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

Saravana Kumar

தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!

Gayathri Venkatesan

ஓசூரில் பெய்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் மக்கள்

Saravana Kumar