ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில் இடம்பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் சந்தோஷ் என்ற பெயர்கொண்ட இருவரும், பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவர் மோனிஷ் ஆகியோர் ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். இதனையறிந்த தலைமையாசிரியர் மகேஷ்குமார் மற்றும் கலை ஆசிரியர் கேசவன் ஆகியோர் இவர்களை ஊக்கப்படுத்தி, மாவட்ட, மாநில அளவிலான ஓவியப் போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவர்கள் மூவரும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டு காலண்டரில் மேற்படி 3 மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையறிந்த மாணவர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
https://twitter.com/news7tamil/status/1483406634336800770
தங்களது ஓவியங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது, தங்களின் ஓவிய ஆர்வத்திற்கு தூண்டுகோலாக அமைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கு உள்ளதுபோல் ஓவியத்திற்கும் தனி ஆய்வகம் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







